வடசென்னை பகுதி முழுவதும் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி வடசென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பவர்களைத் தேடிவந்தனர்.
துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர் தினகரன் ஆனந்தகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் வடசென்னை பகுதிகளில் ஆட்டோக்களில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை ஒட்டி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் விஜய், தலைமை காவலர் முருகேசன் காவலர் விமல் ஆகியோர் காசிமேடு ராயபுரம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஆட்டோவை தேடிவந்தனர்.
வலைதளங்கள் குற்றவாளிகள் எனப் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி மணிகண்டன் என்ற குடுமி மணி, பிரபாகரன் என்ற காசி ஆகியோரும், சுமித்ரா, திவ்யபாரதி, மஞ்சுளா உள்ளிட்ட பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.