சென்னை: பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்படவுள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி முழுவதும் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. கரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து கடந்த ஜனவரியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டடன. பின்னர் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து, 2ஆவது அலை துவங்கியதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சியும் வழங்கப்பட்டன.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் நடைமுறை அறிவிக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 2021-22 கல்வியாண்டிற்கான இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான பாடங்களும் ஆன்லைன் முறையிலேயே நடைபெற்று வருகின்றது.
மேலும் மாணவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதி இல்லாததால் ஆல் இந்தியா ரேடியோ மூலம் கல்வி கற்பிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கிராமப்புரங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒலிபரப்பப்படவுள்ளது. முதல் 20 நிமிடம் பத்தாம் வகுப்பு பாடங்களும், அடுத்ததாக மூன்று இருபது நிமிடங்களில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பு செய்யப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவிலும் பாடம் - 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஒலிவடிவிலும் பாடம்
கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
student_audio
எந்த நேரத்தில் எந்த பாடங்கள் ஒலிபரப்பப்படவுள்ளது என்பதை பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி
Last Updated : Jul 5, 2021, 9:14 AM IST