தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அடுத்த மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? - தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் அடுத்த கட்டமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகயுள்ளது.

mk stalin
mk stalin

By

Published : Sep 28, 2021, 4:50 PM IST

சென்னை: நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் மாணவர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்தவகையில் பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது திறப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details