தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தயாரா? - 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்த இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தையடுத்து மாணவர்கள் தயார்நிலையில் உள்ளார்களா என்னும் கேள்வி எழுகிறது.

1 to 8 school reopening in tamilnadu
1 to 8 school reopening in tamilnadu

By

Published : Sep 14, 2021, 5:57 PM IST

Updated : Sep 20, 2021, 6:11 PM IST

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் "தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதுகுறித்த முடிவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதன்படி இன்று மாலை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. அரசின் முடிவின்படி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பள்ளி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படுவது மாணவர்கள், பெற்றோர்களிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: இறுதி முடிவு

Last Updated : Sep 20, 2021, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details