தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - 1 PM Top News of Etv Bharat

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 PM Top News
1 PM Top News

By

Published : Jun 6, 2020, 1:12 PM IST

1. தலைமை செயலகத்துக்கு அருகே பொதுமக்கள் முகக் கவசமின்றி நடைப்பயிற்சி!

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் கட்டுப்பாட்டை மீறும் வகையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2.யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வு!

யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி தேர்வினை நடத்த தொழில்நுட்ப பல்கலைக்கழங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3.முகக் கவசம் அணியாத நபரின் கழுத்தில் முழங்காலால் அழுத்திய ஜோத்பூர் காவலர்!

ராஜஸ்தானில் முகக் கவசம் அணியாத நபர் மீது காவலர் ஒருவர் முழங்காலை வைத்து அழுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.கேரள யானை உயிரிழப்பு; குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவே தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களில் வெடிவைத்ததாக கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் கைதான குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

5. கேரளாவில் யானையோடு பழகும் குழந்தையின் வைரல் வீடியோ

கேரளாவைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்று யானையோடு அன்போடு பழகிவரும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

6. இறுதி சடங்குக்கு சென்ற குடும்பம் விமான விபத்தில் பலி!

ஜார்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இறுதி சடங்கிற்கு சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

7. 'காக்கா முட்டை மனதுக்கு நெருக்கமான படம்' - ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று தெரிவித்துள்ளார்.

8.நயன்தாராவுக்கு பாட்டு பாடிய எல்ஆர்.ஈஸ்வரி!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் பழம்பெரும் பாடகி எல்ஆர்.ஈஸ்வரி அம்மன் பாட்டு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9. பாரத ஸ்டேட் வங்கியின் வருவாய் நான்கு மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வருவாய் கடந்த காலாண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

10.உமர் அக்மல் வழக்கு, 11ஆம் தேதி விசாரணை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் உமர் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள வழக்கின் விசாரணை ஜூன்11ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details