தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துபாய் டூ சென்னை விமானத்தில் 1.34 கிலோ தங்கம் கடத்திய பெண் - துபாய்

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பெண் பயணியால் கடத்தி வரப்பட்ட 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

துபாய் டூ சென்னை, தங்கக் கடத்தல், GOLD SMUGGLER
துபாய் டூ சென்னை

By

Published : Sep 15, 2021, 7:34 PM IST

சென்னை: வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், டிஆர்ஐ தனிப்படையினர் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்.15) அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை தீவிர சோதனை செய்தனர்.

உடலுக்குள் வைத்து கடத்தல்

அதில் வந்த பெண் பயணி (28) ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பெண் தனது உள்ளாடைக்குள் வைத்து 1.34 கிலோ தங்கம் கடத்தியது வந்தது தெரியவந்தது. இத்தங்கத்தின் சர்வதேச மதிப்பு 65 லட்ச ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிஆர்ஐ தனிப்படையினர் தங்கம் கடத்திய பெண்ணையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலர்கள் அந்தப் பெண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details