மும்பை : வாரத்தின் இரண்டாம் நாள் வர்த்தகமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகம் ஆகின. மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் 435.24 புள்ளிகள் குறைந்து 60,176.50 என வர்த்தகம் ஆனது.
அதிகப்பட்சமாக ஹெச்டிஎஃப்சி, ஹெச்எஸ்இஎல், ரெமெண்ட் மற்றும் பெடரல் வங்கி பங்குகள் இழப்பை சந்தித்தன. இந்த நிலையிலும், டிபிஎல், சன்ஃப்ளாக், சென்னைபெட்ரோ, வைபவ்ஜிபிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 96 புள்ளிகள் (0.53 விழுக்காடு) குறைந்து 17,957.470 என வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் தொடக்கத்தில் 18,060.60 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி 18,095.45 என உயர்ந்து நிறைவில் 17,921.55 என சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இங்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ்பின்சர்வ், கோடாக்வங்கி, இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் சரிவிலும், அதானிபோர்ட்ஸ், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் டாடா கன்சியூம் நிறுவன பங்குகள் லாபத்திலும் வர்த்தகம் ஆகின.
இதையும் படிங்க :முதலீட்டாளர்களின் கனவை கலைத்த கரடி..!