தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் வாங்கணுமா?... முந்துங்கள் இதுவே சரியான நேரம்!

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, தங்கத்தின் விலை ரூ.44,000த்திற்கு கீழ் குறைந்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

today gold rate in chennai
இன்றைய தங்கத்தின் விலை

By

Published : Aug 15, 2023, 12:28 PM IST

சென்னை:சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டுமே தங்கம் விலை ஏறுவதும், குறைவதுமாகவே இருந்து வருகிறது. பொதுவாக ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விசேஷ நிகழ்வுகளும் இருக்காது. அதனால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும்.

இந்த நிலையில், ஜூலை 22 ஆம் தேதி தங்கத்தின் விலையானது 120 ரூபாய் குறைந்து இருந்தது. சொல்லப்போனால், இந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து இருந்தது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த மாதத்தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து மீண்டும் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி சவரன் ரூ.44 ஆயிரத்து 440க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 44 ஆயிரத்து 320க்கும், 9 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 44 ஆயிரத்து 240க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

44ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம்: மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக, ரூ. 46,000த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது, நிலவிய பொருளாதார சூழல், அமெரிக்காவில் தொடர்ந்து திவால் ஆன வங்கிகள் என பல காரணங்களால் உலக முதலீட்டாளர்கள், தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏழைகளுக்கு எட்டாத கனியாக மாறியிருந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது வரை தங்கத்தின் விலை, இறங்குமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 12ஆம் தேதி) தங்கம் விலை குறையத் துவங்கியது. ஒரு கிராம் 22 கேரட் ரூ.5 ஆயிரத்து 500க்கும், ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5 ஆயிரத்து 495க்கும், அதேபோல் ரூ.43 ஆயிரத்து 960க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை 44 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.44,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல் கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 500 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேப்போல் வெள்ளி கிராமுக்கு ரூ.76க்கும், இதேப்போல், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Independence Day 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தைக் கவுரவித்த கூகுள் டூடுல்.!

ABOUT THE AUTHOR

...view details