சென்னை : 24 காரட் தூய தங்கம் மற்றும் 22 காரட் ஆபரணத் தங்கம் ஆகிய இரண்டும் கிராமுக்கு ரூ.5 குறைந்து பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.5,219 ஆ உள்ளது.
மஞ்சள் உலோகம் என வர்ணிக்கப்படும் தங்கம் (24 காரட்) ஏப்.1ஆம் தேதி கிராம் ரூ.5,224 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் (பவுன்) ரூ.41,752 என விற்பனையானது.
அதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,820 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.38,650 என வர்த்தகமானது. இந்நிலையில் ஆபரணத் தங்கம் மற்றும் 22 காரட் தங்கம் ஆகிய இரண்டும் கிராமுக்கு ரூ.5 என பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது.