டெல்லி:இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 67.94 மில்லியன் டன்னாக இருந்தது. இந்த அளவு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11.66 விழுக்காடு அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக உயந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் சிங்கரேணி கூலரீஸ் கம்பெனி நிறுவனமும் மற்ற சுரங்கங்களும் முறையே 7.84 விழுக்காடு, 6.87 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. நிலக்கரி உற்பத்தியில் முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.