ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான தாளவாடியில் பெய்த மழையால் தக்காளி செடிகள் சேதமடைந்ததாலும், கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்து குறைந்தாலும் சத்தியமங்கலத்தில் தக்காளி விலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை குறையாமல் ரூ.60 ஆக நீடித்தது.
ரம்ஜான் பண்டிகை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி விலை உயர்வு - கொத்தமல்லி விலை உயர்வு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.60-இல் இருந்து 40 ஆக சரிந்ததுள்ளது. இதனால் தக்காளி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசாலா பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி கிலோ ரூ.30-இல் இருந்து ரூ.50 ஆகவும், கொத்தமல்லி தழை ஒரு கட்டு ரூ.10 இருந்து ரூ.40 ஆகவும், புதினா கட்டு ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 27ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை