புதுடெல்லி: வீட்டுக் கடன் வட்டி விகிதம் 9.5% தாண்டியிருப்பது வீட்டு விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நுகர்வோர் உணர்வு கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் குறைந்தது 44% பேர் 3BHKகளை விரும்புகின்றனர், 38% பேர் 2BHKகளை விரும்புகின்றனர் என்று தொழில்துறை அமைப்பான CII-Abarock நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்பின் படி 3BHK வீடுகளுக்கான தேவை முதன்முறையாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் 46% பேர் 2BHKகளை விரும்பியுள்ளனர், 40% பேர் 3BHKகளுக்கு வாக்களித்துள்ளனர். இதேபோல், 4BHKகளுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. கோவிட்-க்கு முந்தைய கணக்கெடுப்பில் 2% இருந்து இப்போது 7% ஆக உள்ளது.
ஜனவரி மற்றும் ஜூன் 2022 க்கு இடையில் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வழியாக 5,500 பங்கேற்பாளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பணவீக்கம் வீடு வாங்குபவர்களின் கவலைக்கு ஒரு முக்கிய காரணம் என கருத்து கணிப்பு எடுத்துக்காட்டுகிறது. 61% பேர் தாங்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தை 'பெரும் பாதிப்பு' என்று அறிவித்தனர். பெரும்பாலான கணக்கெடுப்பு பங்கேற்பாளர்கள் (92%) பொருளாதாரம் தற்போதைய நிலையிலேயே இருக்கும் அல்லது அடுத்த 12 மாதங்களில் ஓரளவு மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.
2021 கணக்கெடுப்பில், பதிலளித்தவர்கள் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் நேர்மறையாக இருந்தனர். குறைந்தது 16% பேர் அடுத்த ஒரு வருடத்தில் கணிசமாக மேம்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரூ. 1.5 கோடிக்கு மேல் விலையுள்ள வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ANAROCK குழும CII ரியல் எஸ்டேட் அறிவு அமர்வு தலைவர் அனுஜ் பூரி கூறுகிறார்.