தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 விழுக்காடாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, RBI
ரிசர்வ் வங்கி

By

Published : Aug 5, 2022, 11:10 AM IST

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் (ஆக. 3) தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று (ஆக. 4) ரிசரவ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைவதையும், மந்தநிலை தொடர்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான பணவீக்கத்தில் இந்திய பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது. மேலும், நாட்டில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 13.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பின்படி முதலீடுகள் வெளியேறி உள்ளன" என்றார்.

மேலும், வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களின் (ரெப்போ) வட்டி விகிதத்தை 0.50 விழுக்காடாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. எனவே, ரெப்போ வட்டி விகிதம் 5.40 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில், ரெப்போ வட்டி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின் 6 உறுப்பினர்களும் இந்த வட்டி விகித உயர்வை ஏற்றுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் கொள்கையை வகுக்கும். இதில், ரெப்போ வட்டி விகிதம் மே மாதம் 0.40 விழுக்காடும், ஜூன் மாதம் 0.50 விழுக்காடும் என கடந்த மே மாதம் முதல் 1.40 விழுக்காடு உயர்ந்தப்பட்டுள்ளது.

இதனால் வீடு, வாகன கடன்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் சில்லறை பணவீக்கம், 6 விகிதத்தை தாண்டி நீடித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"இந்திய ரூபாய் மதிப்பு உயர்வது பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ABOUT THE AUTHOR

...view details