தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரெப்போ வட்டி வீதம் உயர்வு! - ரெப்போ வட்டி

நாட்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி வீதம் 4.90 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கம் பாதிப்படையக் கூடும்.

RBI
RBI

By

Published : Jun 8, 2022, 10:30 AM IST

மும்பை: நாட்டில் வங்கிளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டிவீதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய ரெப்போ வட்டி வீதம் 4.90 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வீடு, வாகன கடன்களும் உயரும். பணவீக்க உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல்-மே மாதத்திற்கான தகவல்கள் உள்நாட்டுப் பொருளாதார மீட்சி உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றன. நகர்ப்புற தேவை மீண்டு வருகிறது, கிராமப்புற தேவையும் மேம்பட்டு வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

நகர்ப்புற தேவை மீண்டு வரும்போது, கிராமப்புற தேவை படிப்படியாக மேம்படுகிறது. ஜனவரி-மார்ச் மாதங்களில் உற்பத்தித் துறையில் திறன் பயன்பாடு 74.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 25-50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது எனப் பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவு புதன்கிழமை (ஜூன் 8) காலை நடைபெற்றது. தொடர்ந்து, அன்றைய தினம் காலை 10 மணிக்கு நாட்டில் வங்கிளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச மற்றும் இந்திய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதனால் வீடு, வாகன கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் எனவும் தரவுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ரெப்போ வட்டி மாற்றம்.. யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம்!

ABOUT THE AUTHOR

...view details