டெல்லி:இந்தியாவின் முன்னோடியான மொபைல் பேமண்ட்ஸ் ஆப்-ஆகிய Paytm, தனது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேகமாக செயல்படும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.
மொபைல் பேமெண்ட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் தற்போது, இந்திய அளவிலான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தை கொண்டு பயனர்களுக்கு விரைவாக பயனளிக்கவும், தனது பணியாளர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து Paytm நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'AI உடன் ஆட்டோமெஷன் வசதி கொண்டு எங்களது செயல்பாடுகளை மேம்படுத்தவும், வளர்ச்சி, செலவுகள் உள்ளிட்ட பணிகளின் மந்த நிலையை நீக்கவும், சந்தைப்படுத்துதல் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட AI ஆனது, அதிக பலன்களை வழங்கியுள்ளதால், ஊழியர்களுக்கான செலவில் 10-15% வரை சேமிக்கவும் திட்டுமிட்டுள்ளோம். கூடுதலாக, ஆண்டு முழுவதும் செயல்படாத நிகழ்வுகளை கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்து வருகிறோம்' என்றார்.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பணம் செலுத்துதலில் முக்கிய அங்கமாக திகழும் எங்களில் வணிகம், வரும் ஆண்டுகளில் மனிதவளத்தை 15,000 ஆக அதிகரிக்கலாம். பணம் செலுத்துதலில் மேலதிகாரம் உள்ள நிரூபிக்கப்பட்ட லாபகரமான வணிக மாதிரிகளுடன் நாங்கள் இந்தியாவிற்கு புதுமையான சேவைகளை தருவோம்.