தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிரதமர் மோடி பெருமிதம்... ஒரே மாதத்தில் 6 பில்லியன் பரிவர்த்தனைகள்... - UPI transactions hike

நாடு முழுவதும் ஜூலை மாதம் மட்டும் 6 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Outstanding accomplishment: PM on UPI recording 6 billion transactions in July
Outstanding accomplishment: PM on UPI recording 6 billion transactions in July

By

Published : Aug 2, 2022, 4:12 PM IST

டெல்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆக 2) தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜூலை மாதத்தில் 6 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திப்பதாகவும், இது 2016ஆம் ஆண்டுக்கு பின் முன்னெப்போதும் இல்லாத அளவாகும் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது மிகப்பெரிய சாதனையாகும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுகொள்வதிலும், பொருளாதாரத்தை சீராக்குவதிலும் நாட்டு மக்களின் கூட்டான முடிவை இது காட்டுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் உதவியாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை மாதத்தில் 6.28 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ரூ. 10.62 டிரில்லியன் பணம் கையாளப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் பரிவர்த்தனைகளின் அளவு 7.16 சதவீதமும், கையாளப்படும் பண மதிப்பின் அளவு 4.76 சதவீதமும் அதிகரித்துவருகிறது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யுபிஐ தொடங்கப்பட்ட ஆண்டில் 1 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒரே மாதத்தில் ரூ. 1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ABOUT THE AUTHOR

...view details