தெலங்கானா:இன்சூரன்ஸை எதிர்கால பாதுகாப்பாக பார்ப்பவர்களும் உண்டு, முதலீடாக பார்ப்பவர்களும் உண்டு. கரோனா காலத்திற்குப் பிறகு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துவிட்டது. குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் இன்சூரன்ஸில் முதலீடு செய்கின்றனர். இந்த சூழலில் வழக்கமான இன்சூரன்ஸ் பாலிசி குறித்த சில கேள்விகளுக்கு நிபுணர்களின் பதிலை காணலாம்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு, நிறுவனம் சார்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் (Group health insurance) வழங்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த ஊழியர் மற்றொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டுமா அல்லது டாப் அப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டுமா?
நிறுவனம் சார்பில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்சூரன்ஸை முதன்மையான பாலிசியாக பார்க்க முடியாது. இந்த குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், வேலையில் இருக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுமையான பாதுகாப்பாக கருத முடியாது. எனவே, குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பாசிலி வைத்திருக்கும் ஊழியர்கள், அவர்களுக்கென தனியான ஒரு பாலிசியை எடுத்துக் கொள்வது சிறந்தது. முடிந்தால் அதில், டாப் அப் பாலிசி எடுக்க முயற்சி செய்யலாம். நிறுவனம் வழங்கும் குரூப் பாலிசியை கூடுதலாக வைத்துக் கொள்ளலாம்.
மாதம் 75 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் 50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இப்போது அவர் 50 லட்சம் ரூபாய்க்கு வேறொரு பாலிசி எடுக்கலாமா?
பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரரின் வயதைப் பொறுத்து, ஆண்டு வருமானத்தில் 10 முதல் 12 மடங்கு வரையில் கவரேஜை வழங்குகின்றன. அதன்படி பார்த்தால், அந்த நபர் 50 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு பாலிசி எடுப்பதில் சிக்கல் இல்லை. புதிய பாலிசி எடுக்கும்போது பழைய பாலிசியின் விவரங்கள், வருமானம், நோய் தாக்குதல் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பிரீமியம் ரீ பண்ட் (Premium Refund) பாலிசிகள் விலை உயர்ந்தவை என்பதால், வழக்கமான டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது. காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்கும் நிறுவனத்திடம் பாலிசி எடுக்க வேண்டும்.
ஒரு பெற்றோர் தங்களது பத்து வயது குழந்தைக்கு எதிர்கால பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதற்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றால், பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய பொருத்தமான திட்டம் எது? எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?