தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 7, 2023, 5:32 PM IST

ETV Bharat / business

Maruti suzuki jimny: வெளியானது மாருதி சுசுகியின் 'ஜிம்னி' - ஆரம்ப விலை தெரியுமா?

கார் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த மாருதி சுசுகியின் ஜிம்னி கார் மார்க்கெட்டில் வெளியாகியுள்ளது. அதன் ஆரம்ப விலை 12.7 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki
கார்

ஹைதராபாத்: மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் ஃப்ரோன்க்ஸ்(Fronx) மற்றும் ஆஃப்ரோடர் ஜிம்னி (offroader Jimny) ஆகிய இரண்டு எஸ்யுவி(SUV) வகை கார்களை அறிமுகப்படுத்தியது. எஸ்யுவி வகை கார்கள் விற்பனையில் கோலோச்ச வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கார்களை மாருதி சுசுகி கொண்டு வந்தது. இதையடுத்து இரண்டு கார்களுக்கும் ஜனவரியிலேயே முன்பதிவு தொங்கிவிட்டது.

இந்த நிலையில், கார் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த மாருதி சுசுகியின் ஜிம்னி (Jimny) கார் மார்க்கெட்டில் வெளியாகியுள்ளது. இந்த கார் இன்று முதல்(ஜூன் 7) இந்தியாவில் உள்ள அனைத்து மாருதி NEXA ஷோரூம்களிலும் கிடைக்கும் என மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப விலை 12.7 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காம்பேக்டான எஸ்யுவி வகையைச் சேர்ந்த இந்த ஜிம்னியில் K15B 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105PS ஆற்றலையும், 134Nm பீக் டார்க்கையும் வழங்கும். இந்த காரின் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு MT மற்றும் 4-ஸ்பீடு AT ஆகியவை அடங்கும்.

இந்த காரில் ஐந்து கதவுகள் உள்ளன. இது ஏழு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும். எக்ஸ்டீரியரை பொறுத்த வரை ஜிம்னியானது வாஷருடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ஃபாக் லேம்ப்ஸ், 15-இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஹெச்டி டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆர்காமிஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் உள்ளன.

ஆறு ஏர்பேக்ஸ், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்ஷியல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஹில் டீசென்ட் கன்ட்ரோல், ரியர்வியூ கேமரா, ஐஎஸ்ஓஃபிக்ஸ் மற்றும் ஏபிஎஸ் வித் ஈபிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி, "சாகசத்தின் சின்னமான ஜிம்னியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியின் வெளியீடு எங்கள் எஸ்யுவி போர்ட்ஃபோலியோவில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இது எங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். வாடிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பதிலைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சுசுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டுச் சந்தையில் மட்டுமல்லாமல் உலகளாவிய ஏற்றுமதியிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஜிம்னி முதலில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மேக்-இன்-இந்தியாவுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: Disney Layoff : 3வது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் டிஸ்னி... எவ்வளவு பேர் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details