தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இதுவரை ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெறவில்லையா..? இது உங்களுக்குதான்!! - நோ க்ளெய்ம்

ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில், 'நோ க்ளெய்ம்' (No claim) அல்லது ஒட்டுமொத்த போனஸ் (cumulative bonus) திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

health insurance
health insurance

By

Published : Mar 25, 2022, 6:46 PM IST

ஹைதராபாத் : நாளுக்கு நாள் மருத்துவச் செலவுகள் அதிகரித்துவருகின்றன. ஆகையால் நிதி திட்டங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் என்னும் மருத்துவக் காப்பீடு திட்டங்களும் அத்தியாவசியம் ஆகிவிட்டன.

அந்த வகையில், காப்பீட்டாளர்கள் தங்கள் பாலிசிதாரர்களுக்கு பாலிசி ஆண்டில் எந்தக், 'க்ளெய்ம்' கோரிக்கையும் செய்யாதபோது அவர்களுக்கு சில நன்மைகளை வழங்க முயல்கின்றனர்.

இது ஒட்டுமொத்த போனஸ்களில் ஒன்றாகும். இது தனிப்பட்ட மற்றும் குடும்ப மருத்துவக் காப்பீடு என இரண்டிற்கும் பொருந்தும்.

ஒரு வகையில், காப்பீட்டு நிறுவனம் உங்கள் பாலிசியின் மதிப்பை அதிகரிப்பதை போனஸாகக் கருதலாம். தவிர, இதற்கு கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்பட மாட்டாது.

உதாரணமாக, நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான பாலிசியை எடுத்து, நீங்கள் க்ளெய்ம் செய்யாத ஆண்டிற்கு உங்கள் காப்பீட்டு நிறுவனம் 5 சதவீதம் போனஸை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் பாலிசியின் மதிப்பு ரூ.10,50,000 ஆக இருக்கும். இரண்டாவது வருடத்திற்கு க்ளெய்ம் இல்லை என்றால், பாலிசியின் மதிப்பு ரூ.11 லட்சத்தை எட்டும். பாலிசி மதிப்பை அதிகரிக்க நிலையான ஸ்லாப் கொள்கை எதுவும் இல்லை. மேலும், இது காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். தற்போது, சில காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பாலிசியின் மதிப்பில் 150-200 சதவீதம் வரை போனஸாக வழங்குகின்றன.

உடல்நலக் காப்பீட்டில் போனஸ்: ஒட்டுமொத்த போனஸின் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பாலிசி ஆண்டில் நீங்கள் க்ளைம் செய்தால், மொத்த போனஸ் கழிக்கப்படாது. வழங்கப்பட்ட விகிதத்தில் போனஸ் குறைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் காப்பீட்டு நிறுவனம் க்ளெய்ம் செய்யப்படாத ஒரு வருடத்திற்கு 10 சதவீதம் போனஸை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.

நீங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக எந்தக், 'க்ளெய்ம்' உரிமைகோரலும் செய்யவில்லை. அப்போது உங்கள் பாலிசியின் மதிப்பு 50 சதவீதம் அதிகரிக்கும். உரிமைகோரலின் ஆறாவது ஆண்டில் உங்கள் பாலிசியின் மொத்த மதிப்பு 10 சதவீதம் குறைக்கப்படும்.

நீங்கள் ரூ. 10 லட்சம் பாலிசி எடுத்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் க்ளெய்ம் செய்யவில்லை என்றால், பாலிசி ரூ. 15 லட்சம் ஆக இருக்கும். நீங்கள் இப்போது, 'க்ளெய்ம்' செய்தாலும், இன்சூரன்ஸ் நிறுவனம் 10 சதவீதம் தொகையைக் குறைக்கும். அதாவது, உங்கள் பாலிசி மதிப்பு ரூ.14,00,000 ஆக இருக்கும்.

அனைத்து பாலிசிகளுக்கும் பொருந்தாது: அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கும் ஒட்டுமொத்த போனஸ் இல்லை. மேலும், காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து, போனஸ் விகிதம் மாறுபடும். போனஸ் தொடர்பான விதிகளை அறிக. அதிகபட்ச போனஸ் எவ்வளவு என்பது முக்கியம்.

சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியின் ஆரம்ப நாள்களில் அதிக சதவீத போனஸை வழங்குகின்றன. இது 50 சதவீதம் வரை இருக்கலாம். அதன் பிறகு, அவர்கள் அதைக் குறைத்து, 5-10 சதவீதமாகக் கட்டுப்படுத்துகிறார்கள். ஒரு ஒட்டுமொத்த போனஸ் என்பது பிரீமியத்தில் கூடுதல் சுமை இல்லாமல் பாலிசியை அதிகரிக்க ஒரு வழியாகும்.

இந்தப் போனஸ் நல்லது என்றாலும், அதற்கு சில வரம்புகள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். இதை முழுவதுமாக நம்புவது நல்லதல்ல. மருத்துவப் பணவீக்கம் ஆண்டுக்கு 12-15 சதவிகிதம் அதிகரித்து வருவதால், தற்போதைய பெரிய அளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கூட பல ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்காது.

உரிமைகோரத் தவறினால் போனஸ் கிடைக்கும். ஆனால், வயதாகும்போது நோய் வருவது இயல்பு. அவ்வப்போது, ​​நமது தேவைகள் மற்றும் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் அடிப்படை பாலிசி தொகையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இதனால், பாலிசி போனஸுடன் மேலும் பலப்படுத்தப்படும்.

இதையும் படிங்க : சரியான வாகனக் காப்பீட்டுத் திட்டத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது?

ABOUT THE AUTHOR

...view details