மும்பை: மார்ச் மாதத்தில் 7.60 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.28 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று திங்கள்கிழமை (மே2) வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது.
கிராமப்புறங்களில், வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.18 சதவீதமாக இருந்தது, முந்தைய மாதத்தில் 7.29 சதவீதமாக இருந்தது. வேலையின்மை விகிதம் ஹரியானாவில் அதிகபட்சமாக 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும், பிகாரில் 21.1 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 15.6 சதவீதமாகவும் உள்ளது என்று தரவு காட்டுகிறது.
இது குறித்து சிஎம்ஐஇ நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. இது நல்ல முன்னேற்றம்” என்றார். ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 36.46 சதவீதத்தில் இருந்து 37.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச செஸ் போட்டிக்கு இந்தியா சார்பில் 20 போட்டியாளர்கள்