சென்னை:திருடர்களுக்குப் பயந்து வீடுகளில் தங்கம் வைத்திருக்கப் பயப்படும் காலத்திற்கு மத்தியில் சட்ட விதிமுறைகளுக்குப் பயந்தும் தங்கம் வாங்காமலும், ஆதாரம் இன்றி வீட்டில் வைத்திருக்காமலும் இருக்கும் நபர்கள் உண்டு. ஆனால் இந்தியச் சட்டத்தின் படி திருமணமான பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கம் வைத்திருக்க அனுமதி உண்டு. அதிலும் குறிப்பாக அந்த நகைகள் வைத்திருப்பதற்கு எவ்வித ஆதாரமும் தேவை இல்லை என்பதே சட்டவிதி. அந்த வகையில் வீட்டில் யார், யார் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
திருமணமான பெண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்:வீட்டில் உள்ள திருமணமான பெண்கள், 500 கிராம் அதாவது அரை கிலோ வரை தங்கம் வைத்திருக்கலாம். அது ஆபரணமாகவோ அல்லது நாணயங்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என இந்தியச் சட்டம் சொல்கிறது. மேலும் அந்த நகைகளுக்கு எந்தவித சான்றுகளும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பெண்குழந்தைகள் இருந்தால் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்:வீட்டில் திருமணத்திற்குப் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கென 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். அது ஒரு பெண் குழந்தைக்கான அளவு. அதேபோல் இரண்டு அல்லது 3 மூன்று பெண் குழந்தைகள் இருந்தால் தலா 250 கிராம் வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து 750 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம்.