டெல்லி: இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வப்போது செங்கடல் வழியாக ஏற்றுமதி மேற்கொள்ளும் கப்பல்களை குறிவைத்து ஏமனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹௌதி அமைப்பினர், தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆரம்பித்த போரில், இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதத்தில் பாலஸ்தீனிய பகுதியான காசா மக்களே அதிகமானோர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சரக்குகள் கொண்ட கப்பல்களை குறிவைத்து, ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தொடர்புடைய ஹௌதி அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக 10 நாடுகளைக் கொண்ட கடற்படைக் கூட்டணி மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் தொடங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காசா மீது தொடரப்பட்ட போருக்கு பழி வாங்கும் செயலாக இஸ்ரேலுடன் நட்பு பாராட்டும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து ஹௌதி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ஏற்றுமதி பாதைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, செங்கடல். அந்த வகையில், சமீபத்தில் ஹௌதீஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற டேங்கர் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, MV Chem Pluto லிபேரியாவின் கெமிக்கல் மற்றும் எண்ணெய் டேங்கரில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின்போது, 21 இந்தியர்கள் மற்றும் ஒரு வியாட்நாம் நாட்டைச் சேர்ந்தோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. முன்னதாக நவம்பர் மாதம் 25 இந்தியர்களைக் கொண்டு துருக்கியில் இருந்து தெற்கு செங்கடல் வழியாக இந்தியா புறப்பட்ட சரக்கு கப்பல் ஹௌதி அமைப்பினரால் கடத்தப்பட்டது.
இப்படியான தொடர் சம்பவங்கள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹௌதி தாக்குதலினால் இந்தியப் பொருளாதாரத்தில் இரு கோணங்களில் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ட்ரூரி கடல்சார் ஆராய்ச்சியின் மூத்த மேலாளரான (துறைமுக மற்றும் கொள்கலன் ஆராய்ச்சி) சுப்ராதா கே பெக்ரா, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "செங்கடலில் ஹௌதி தாக்குதலினால் இந்திய ஏற்றுமதியாளர்கள் அவர்களின் சரக்குகளை ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், செங்கடல் மூலம் ஏற்றுமதி நிலை பெற்றிருந்த நிலையில், cape of good hope வழியாக தற்போது 500 டாலர் முதல் 1000 டாலர் TEU மதிப்புமிக்க சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருட்களின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும், இது கொண்டு செல்லப்படும் பொருட்களின் காப்பீட்டுச் செலவையும் அதிகரிக்கும். பொதுவாக இந்திய வர்த்தகத்தில் அதிகளவில் இடம் பிடித்திருப்பது ஆடைகள், ஜவுளி மற்றும் மருந்துப் பொருட்களே. வியாபாரிகள் அவர்களின் பொருட்களுக்கு எம்முறையிலான வணிகத்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பெரும்பாலும் முடிவெடுப்பது, வியாபாரிகளே.