தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஒரே மாதத்தில் ரூ. 1.49 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - ஜிஎஸ்டி வசூல் உயர்வு

கடந்த மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

gst-collections-rises-28-pc-to-rs-1-49-lakh-cr-in-july
gst-collections-rises-28-pc-to-rs-1-49-lakh-cr-in-july

By

Published : Aug 1, 2022, 12:46 PM IST

டெல்லி:இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வசூல் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ரூபாயாகும். இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி) அடங்கும்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2ஆவது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ரூ.6,302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடியாக வசூலாகியுள்ளது. புதுச்சேரியில் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடியாக வசூலாகியுள்ளது.

ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ. 32,365 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 26,774 கோடியும் அரசு வழங்கியுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் வழக்கமான பைசலுக்கு பின் சிஜிஎஸ்டிக்கு ரூ.58,116 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 59,581 கோடியாகவும் உள்ளது.

கடந்தாண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில், அதைவிட 28 சதவீதம் இந்த மாதம் அதிகமாக உள்ளது. அதேபோல கடந்தாண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வணிக சிலிண்டரின் விலை ரூ.36.50 காசுகள் குறைப்பு!

ABOUT THE AUTHOR

...view details