இந்தியாவில், தங்கத்தின் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு 10 கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த விலை ஏற்றமானது, கரோனா தொற்று பாதிப்பு, அமெரிக்கா- சீனாவுடன் இடையிலான பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் உயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதே போல், சந்தையில் வர்த்தகமாகும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 69 குறைந்து 62 ஆயிரத்து 829ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபன் படேல், " 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 51 ஆயித்தை எட்டியுள்ளது. இன்று மட்டும் சர்வதேச சந்தையில் ரூ.502 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ. 38 ஆயிரத்து 520ஆக விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.