சென்னை:கடந்த பிப்ரவரி 1 அன்று நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் இருந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக மாறி மாறி நிலவி வருகிறது. இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக, சென்னையில் 1 சவரன் தங்கத்தின் விலை 44,000ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று (பிப்.9) ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,375 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 43,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி ஒரு கிராம் 73.50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று (பிப்.10) சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய் குறைந்து, 5,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.