சென்னை:மத்திய பட்ஜெட் 2023, நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரித்தும், சிலவற்றிற்கு குறைத்தும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கும் நிலை உருவானது. ஆனால், பட்ஜெட் வாசிப்பின்போதே, ஒருபுறம் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இதன்படி நேற்று (பிப்.1) ஒரு கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து, 42,880 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று (பிப்.2) சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 60 ரூபாய் உயர்ந்து, 5,475 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் உயர்ந்து 43,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்கத்தின் உச்சபட்ச விலை ஆகும்.