டெல்லி: சர்வதேச சந்தையில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் கச்சா எண்ணெய் ரூ. 36 உயர்ந்து ஒரு பீப்பாய் ரூ.7,325ஆக வர்த்தகமானது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை 0.59 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 91.39 அமெரிக்க டாலருக்கும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.56 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 96.85 டாலருக்கும் விற்பனையானது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.7,325ஆக விற்பனையாகிறது.
இதனிடையே மத்திய அரசு ஜூலை மாதத்தில் மொத்த நிலக்கரி உற்பத்தி 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 54.25 மில்லியன் டன்னாக இருந்தது. மொத்தமுள்ள 37 முன்னணி நிலக்கரி சுரங்கங்களில் 24 சுரங்கங்களில் இந்தாண்டு ஜூலை மாதம் நிலக்கரி 100% உற்பத்தி செய்யப்பட்டது. மற்ற 7 சுரங்கங்களில் 80 முதல் 100% சதவீதத்திற்குள் நிலக்கரி உற்பத்தி நடைபெற்றது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்... கட்டணம் குறையுமா..? அதிகரிக்குமா..?