தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

திடீரென சரிந்த தங்கம் விலை - இன்றைய தங்கம், வெள்ளி விலை

சென்னையில் தங்கத்தின் விலை இன்று(ஏப். 19) சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது.

திடீரென சரிந்த தங்கம் விலை
திடீரென சரிந்த தங்கம் விலை

By

Published : Apr 19, 2022, 10:30 AM IST

Gold Rate சென்னை: கடந்த சில நாள்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. வாரத்தின் முதல் நாளான நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து விற்பனையானது.

இன்று(ஏப். 19) காலை நிலவரப்படி தங்கம் விலை திடீரென சரிந்து காணப்படுகிறது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்தும், சவரனுக்கு ரூ.168 குறைந்தும் காணப்படுகிறது. ஆக கிராமுக்கு ரூ.5,029 ஆகவும், சவரனுக்கு ரூ.40,232 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,428 ஆகவும், சவரனுக்கு ரூ.43,424 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: நேற்றைய(ஏப். 18) விலையுடன் ஒப்பிடுகையில் இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.74.90-க்கும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.74,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி கிலோவுக்கு ரூ.75,000-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்'

ABOUT THE AUTHOR

...view details