யெஸ் வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை எடுக்கத் தொடங்கியதால், வாடிக்கையாளர்கள் ஒரு வங்கிக் கணக்கில் ரூ.50,000க்கு மேல் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். ஏனெனில் வங்கி திவால் ஆகிவிட்டால் வாடிக்கையாளரின் பணம் மூழ்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், யெஸ் வங்கியின் எதிர்காலம் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை எனவும், டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.