மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலை முன்னிட்டு, பி.எஸ்.இ., என்.எஸ்.இ. வர்த்தக விடுமுறையை அறிவித்தது. நேற்றைய விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கிய பங்குச்சந்தையில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவில் வர்த்தமாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துவருகின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 1981ஆம் ஆண்டு புனேவில் தொடங்கப்பட்டது. ஏழு பேர் கொண்டோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும் முன்னாள் தலைமை அலுவலரான நாராயண மூர்த்தியின் அறிவுரைப்படிதான் இந்த நிறுவனம் நீண்டகாலமாகசெயல்பட்டுவந்தது.