சீனாவின் வூகான் மாகாணத்தில் பெருமளவு உயிர்களை காவு வாங்கிய கொரோனா (கொவிட் 19) வைரஸ், அதன் அண்டை நாடுகளையும் நிலைகுலைய செய்தது. இந்தியாவை பொருத்தமட்டில் கடல், வான்வழி போக்குவரத்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சீனா மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட அதன் அண்டை நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் வருவோர்களும் விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் குறித்த ஒருவித பீதி மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான டா ஆன் ஜீன் கோ, ஜிலாங் சயின்டிஃபிக், ஷாங்காய் கெஹுவா பயோ-இன்ஜினியரிங் ஆகியவை வைரஸைக் கண்டறிவதற்கான கருவிகளை உருவாக்கியதாகக் கூறினர். அப்போது அவற்றின் பங்குகள் தினசரி 10 விழுக்காடு உயர்வு வரம்பை எட்டியது.
காற்றை சுத்தப்படுத்தும் கருவிகளை உற்பத்தி செய்யும் ஐப்பானைச் சேர்ந்த நிறுவனங்கள் 10 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்தன. மலேசிய ரப்பர் கையுறைகள் உற்பத்தியாளர்கள் குறைந்தது 5 விழுக்காடு உயர்வைக் கண்டனர்.
இயற்கையாகவே, வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளை உருவாக்க தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருந்து நிறுவனங்கள் அல்லது தடுப்பூசி ஒன்றை உருவாக்கக்கூடிய மருந்து நிறுவனங்கள், கொரோனா வைரஸ் நோயால் பயனடைகின்றன என்று பலர் கருதுகிறார்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன், ஃபைசர், எம்.எஸ்.டி, கிளாக்சோஸ்மித்க்லைன் (ஜி.எஸ்.கே), சனோஃபி போன்ற நிறுவனங்கள் உலகளாவிய தடுப்பூசி சந்தையில் ஆதிக்கம் செலுத்துபவை ஆகும். உலகளாவிய தடுப்பூசி சந்தை இந்த ஆண்டு 60 பில்லியன் அமெரிக்க டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கொரோனா போன்ற வைரஸ் தொற்றுவிலிருந்து சிகிச்சையளிக்க அல்லது தடுக்கக்கூடிய மருந்துகளால், இந்திய மருந்து நிறுவனங்கள் பயனடைய முடியுமா என்பதும் தெளிவாக இல்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.
எனினும் இந்தியாவிற்கு 70 விழுக்காடு மருந்து மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து கிடைக்கிறது. சி.என்.என். அறிக்கையின்படி, பொருள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனங்கள் ஜி.எஸ்.கே இந்தியா, ஃபைசர் (பி.எஃப்.இ), சிப்லா ஆகும்.
இதையும் படிங்க:ஷாஹீன் பாக் போராட்டம்: மத்தியஸ்தர்கள் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்