தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

காய்கறி விலை சரிவு: பொதுமக்கள் நிம்மதி - காய்கறி விலை சரிவு

சென்னை: கடந்த சில மாதங்களாகக் கடுமையாக உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை தற்போது மிகவும் குறைந்துவருவது பொதுமக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

price
price

By

Published : Mar 5, 2020, 1:39 PM IST

Updated : Mar 5, 2020, 8:12 PM IST

கடந்த சில மாதங்களாகக் காய்களின் விலை கடும் ஏற்றத்தில் இருந்தது. வெங்காயம், முருங்கை போன்றவைகளின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தன. இதனால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவும், அன்றாட வீட்டு உணவுகளை சமைக்கவும் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இது படிப்படியாகக் குறைந்து தற்போது காய்களின் விலை நன்கு குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய நிலவரப்படி, பெரிய வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 40 முதல் 50 ரூபாய் வரையும், தக்காளியின் விலை கிலோ ஒன்று 15 ரூபாயாகவும் உள்ளது.

டிசம்பர்- ஜனவரி மாதங்களில் கிலோ 400 ரூபாய் வரை சென்ற முருங்கைக்காய் விலை தற்போது 40 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல், கத்தரிக்காய் 20 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும், கோவைக்காய் 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 25 ரூபாய்க்கும், பூசணிக்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

காய்கறி விளையும் பகுதிகளில் உரிய நேரத்தில் பருவமழை பெய்ததால், அவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும், இதனால் சந்தை வரத்து அதிகரித்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் நீர்க்காய்கறிகள் உள்ளிட்ட பெரும்பாலானவைகளின் விலை குறைவு பொதுமக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

காய்கறி விலைச் சரிவு - பொதுமக்கள் நிம்மதி!

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு: தென்னை நார் தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி குழு ஆய்வு!

Last Updated : Mar 5, 2020, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details