தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'ஹூவாய் மீதான தடை, ஹூவாய் இந்தியாவுக்கும் பொருந்தும்' - அமெரிக்கா அதிரடி - ஹூவாய் மீதான தடை, ஹூவாய் இந்தியாவுக்கும் உண்டு - அமெரிக்க அதிரடி

வாஷிங்டன்: கடந்த வாரம் ஹூவாய் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட சில விதிமுறைகள் ஹூவாய் இந்தியாவுக்கும் பொருந்தும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

US includes Huawei India
US includes Huawei India

By

Published : May 20, 2020, 11:41 PM IST

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், குறைகடத்திச் சாதனங்களில், அதாவது ஒருவகை 'சிப்' உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும்; அமெரிக்கா இதற்குப் புதிய கட்டுப்பாடுகளை கடந்த வாரம் விதித்தது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறுகையில், 'அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே இந்த ஹூவாய் நிறுவனத்துக்குப் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது.

இந்தப் புதிய விதிகளின்படி அமெரிக்கத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குறை கடத்திச் சாதனங்களை (Semi-Conductor), தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும் என்பது தான் அது' என்றார்.

இந்தப் புதிய விதிகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான தகவல்படி ஹூவாய் மீதான தடை, ஹூவாய் இந்தியாவுக்கும் உண்டு என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!

ABOUT THE AUTHOR

...view details