மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பின் தொடர் சரிவை சந்தித்துவந்த பங்குச்சந்தை கடந்த வாரம் (ஆகஸ்ட் 5 முதல் 9ஆம் தேதி வரை) முடிவில் அதாவது கடந்த 9ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 463.69 உயர்ந்து 37,581.91 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்ஃடி 112.35 புள்ளிகள் உயர்ந்து 11,109.7 ஆக நிலைபெற்றன.
அதன்படி, கடந்தவாரத்தில் பங்குச்சந்தையின் போக்கை நிர்ணயித்த ஐந்து பெரிய நிறுவனங்களும்... அவை பெற்ற பங்கு விழுக்காடு பற்றியும் காணலாம்.
1 . டாடா ஸ்டீல் (TATA Steel)
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் 43,631.52 கோடி ரூபாயாகும். கடந்த வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது, 11 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இது அந்நிறுவனத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2 . எண்டூரன்ஸ் டெக்னாலஜிஸ் (Endurance Technologies)
முப்பது ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழிலில் முன்னணி நிறுவனமாக இருக்கும் எண்டூரன்ஸ் டெக்னாலஜிஸ் கடந்த வாரம் வியாழக்கிழமை 9 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனம் சந்திக்கும் மிகப்பெரிய வீழ்ச்சி இதுதான்!
அதன்பின் சுதாரித்துக் கொண்ட அந்நிறுவனம் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடத்தியது. அதில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்படி, நான்கு சாக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு டயர்களை உற்பத்தி செய்வதற்கான புதிய வணிகத்தின் விரிவாக்கத் திட்டத்தை திரும்பப் பெற்றது.
இந்த அறிவிப்பு வந்த அடுத்தநாளே (ஆகஸ்ட் 9) இந்த நிறுவனத்தின் பங்கு இருமடங்காக அதிகரித்தது. அதாவது, 17 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது.