தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏற்றுமதி வாய்ப்புகள், வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு - தமிழக அரசு - இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு

ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்து இணையவழி கருத்தரங்கு, பயிற்சி வகுப்பு பங்கேற்க விண்ணப்பம் - தமிழக அரசு

import and export
import and export

By

Published : May 19, 2020, 11:48 PM IST

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, இணையவழி மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள், வியாபாரம் துவங்குதல் பற்றிய 3 நாள் பயிற்சி வரும் மே மாதம் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி வர்த்தகத்தின் அடிப்படைகள், அதிக வாய்ப்புள்ள பொருட்கள் / நாடுகள் கண்டறிதல் ஏற்றுமதி தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள் செய்யும் முறை GST / IEC / RCMC, ஏற்றுமதி விலை நிர்ணயம் & பாதுகாப்பாக பணம் பெறும் முறைகள் மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதி ஆணை செயலாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு உதவிடும் அரசு மற்றும் தனியார் சேவை அமைப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி திட்டங்கள் & ஊக்க தொகைகள் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் / பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள். 8668102600, 9444557654. முன்பதிவு அவசியம்,

இதையும் படிங்க: ஊக்குவிப்பு முதல் வேலைவாய்ப்பு வரை

ABOUT THE AUTHOR

...view details