மும்பை:புது வருட பிறப்பின் முதல் நாளில் உயர்வுடன் இந்தியப் பங்குச் சந்தை தனது வர்த்தகத்தைத் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.98 புள்ளிகள் உயர்வுடன் 47,871.31ஆக வர்த்தகமானது. இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.60 புள்ளிகள் உயர்வைக் கண்டு 14,020.35ஆக இருந்தது.