பங்குச்சந்தை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. தனியார் வங்கி பங்குகள் சரிவை சந்தித்து வருவதால் தேசிய பங்குச் சந்தையான நிஃப்ட்டி(NIfty) 114 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 359யைப் பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்(Sensex) ஒரு கட்டத்தில் 700 புள்ளிகள் குறைந்து மீண்டும் உயர்வைச் சந்தித்தது.
பங்குச்சந்தையில் 700 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ்! - தமிழ் வர்த்தக செய்திகள்
மும்பை: பங்குச் சந்தை முடிவின் பொது, மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியைச் சந்தித்தது.
stock market update
பின்பு பங்குச்சந்தை நிறைவடையும் நிலையில் 361 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 38 ஆயிரத்து 305இல் நிறைவடைந்தது. சிறப்பாக செயல்பட்ட பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் பொருள் வணிகமாக கம்மாடிட்டியில் (தங்கம்,கச்சா எண்ணெய்) முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: புயல் வேகத்தில் காலியாகும் சியோமி!