யெஸ் வங்கி விவகாரத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த வாரம் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த வார சரிவிலிருந்து இந்த வாரம் பங்குச் சந்தைகள் மீளும் என்று முதலீட்டாளர்கள் நம்பியிருந்த நிலையில், மீண்டும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 1,447 புள்ளிகள் குறைந்து 36,129 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 377 புள்ளிகள் குறைந்து 10,611 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.