தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்த வார பங்குச்சந்தை எப்படியிருக்கும்?

ஹைதராபாத்: தொடர்ந்து பல வாரங்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுவர்த்தகமானாலும், இந்த வாரம் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Stock market
Stock market

By

Published : Dec 7, 2020, 1:00 PM IST

இந்திய பங்குச்சந்தை கடந்த ஐந்து வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம்கண்டு வர்த்தகமாகிறது. மிக விரைவில் இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை போன்றவை காரணமாக நிஃப்டி கடந்த வார வர்த்தகத்தில் 13,258.55 புள்ளிகளை தொட்டுள்ளது. அதேபோல சென்செக்ஸ் கடந்த வாரம் மட்டும் 2.1 விழுக்காடு அதிகரித்து 45 ஆயிரத்தை அடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நல்ல முறையில் லாபம் அடையும் என்று எதிர்பார்ப்பதாக ரிலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் துணை தலைவர் அஜித் மிஸ்தா தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து துறை நிறுவனங்களிலும் முதலீடு செய்ய முதலீட்டார்கள் ஆர்வமாக இருந்தனர். குறிப்பாக, ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

வரும் வாரம் எப்படி இருக்கும்?

வரவிருக்கும் வாரத்தில் பங்குச்சந்தை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து அஜித் மிஸ் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மற்றும் இந்தக் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பு ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.

எனவே, சர்வதேச பங்குச்சந்தையின் போக்கே வரும் வாரத்தில் இந்திய பங்குச்சந்தையின் போக்கை தீர்மானிக்கும். தவிர, கரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்களும் பங்குச்சந்தை முடிவுகளில் பிரதிபலிக்கும்" என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு பிரிட்டனும் பஹ்ரைனும் ஒப்புதல் அளித்திருந்தது. தடுப்பு மருந்து குறித்த செய்திகள் நேரமறையாக இருந்தாலும், இன்னும் சில காலம் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் சேர்ந்தே இருக்கும்.

இது குறித்து அஜித் மிஸ்ரா கூறுகையில், "சந்தை சீராக உயர்ந்தாலும் மெதுவான வேகத்திலேயே உயர்ந்தது. இது நேர்மறையானது என்றாலும் எச்சரிக்கையான அணுகுமுறையையே இது குறிக்கிறது.

வரும் வாரம் நிஃப்டி அதிகபட்சமாக 13,450இல் வர்த்தகமாகும். அதேநேரம் குறைந்தபட்சம் 13,100-12,900 புள்ளிகள் வரையும் குறையும் வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: குடும்பங்களின் செலவு மேலும் அதிகரிக்கும் - ஆர்பிஐ நடத்திய கணக்கெடுப்பில் வெளியான தகவல்

ABOUT THE AUTHOR

...view details