தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்திய ஜீ நிறுவன பங்குகள் - stock market hits high

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஏறுமுகம் காணும் நிலையில் ஜீ என்டர்டைன்மெண்ட் பங்குகள் 10 விழுக்காடுகளுக்கு மேல் சரிவை சந்தித்து வருகிறது.

zee shares slowdown

By

Published : Oct 19, 2019, 2:41 PM IST

தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்து 39,298.38 எனவும், நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 11661.85 எனவும் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை சிறப்பாக செயல்பட்ட ஜீ என்டர்டைன்மெண்ட் பங்குகள் இன்றைய தொடக்கத்தில் இருந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்ட்ராடே டிரேடிங்(Intraday Trading) எனப்படும் தினசரி வர்த்தகத்தில் 10 விழுக்காடு சரிவும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில் 5.5 விழுக்காடு சரிவும் சந்தித்துள்ளது.

மேலும் பஜாஜ் மோட்டார்ஸ் (Bajaj Motors), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), எய்ச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) சரிவை சந்திக்கும் நிலையில் அதானி போர்ட்ஸ் (Adani Ports), கோல் இந்தியா (Coal India), எஸ் பேங்க் (Yes Bank), க்ராஸிம்(Grasim) போன்ற பங்குகள் வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை வழங்கி வருகிறது.

பொருட்கள் வணிகமாக கம்மோடிட்டியில் (Commodity) தங்கம், வெள்ளி பங்குகள் சரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 27 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியில் சீனா

ABOUT THE AUTHOR

...view details