கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை சரிவை சந்தித்து வந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை உயரும் என முதலீட்டார்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் விதமாக, இன்றைய முடிவின் பொது சென்செக்ஸ் மற்றும் நிஃப்ட்டி சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 141 புள்ளிகள் சரிந்து 37,531க்கும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்ட்டி 48 புள்ளிகள் குறைந்து 11,126க்கும் வர்த்தகமாகின. மேலும் டாடா மோட்டார்ஸ்(Tata motors), டாடா ஸ்டீல்(Tata Steel), சன் பார்மா(Sun pharma), டெக் மஹிந்திரா(Tech Mahindra), எம்&எம்(M&M), ஓஎன்ஜிசி(ONGC), எல்&டி(L&T) என்டிபிசி(NTPC), இன்டஸ்இன்ட்(IndusInd Bank) போன்ற பங்குகள் கிட்டத்தட்ட 3 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளன.