நாடாளுமன்றத்தில், 2019-20 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யவுள்ளார். இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜக தாக்கல் செய்யவிருக்கும் முதல் பட்ஜெட் என்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏறுமுகத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - indian stock exchange
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
Budget
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது.
வர்த்தகம் தொடங்கி 30 நிமிடங்கள் ஆன நிலையில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 25 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 103 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.