மும்பை: திங்கள்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ 531 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 258 புள்ளிகளும் வீழ்ந்தன.
வாரத்தின் முதல் நாளான இன்று முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கின. முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 530.95 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 48,348 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டியை பொறுத்தவரை 133 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிகப்பட்சமாக 5.36 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. தொடர்ச்சியாக இண்ட்இந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், ஆசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் பவர் கிரீட் நிறுவன பங்குகள் 4.72 வரை வீழ்ச்சியடைந்தன.