மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆனது. பங்குச்சந்தை இன்று வர்த்தகத்தை தொடங்கியவுடன் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 50,096.57 புள்ளிகளில் வர்த்தகமானது.
முதல்முறையாக 50,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்! - பங்குச்சந்தை செய்திகள்
09:18 January 21
அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. நிஃப்டியும் நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 14 ஆயிரத்து 700 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது. கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பான உயர்வை கண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர்வை சந்திக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:இந்திய சாலைகளில் பாய வருகிறான் டெஸ்லா!