மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஜன. 06) 263.72 (0.54 விழுக்காடு) புள்ளிகள் குறைந்து 48,174.06 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 53.25 (0.38 விழுக்காடு) புள்ளிகள் குறைந்து 14,146.25 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு சரிவை கண்டது. அதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ், பஜாஜ் பைனாஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன. அதேவேளை பவர் கிரிட், பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்கள் உயர்வைக் கண்டன.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. அதேவேளை டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க:பட்ஜெட் 2021-22: பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர்