இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 222.14 புள்ளிகள் (0.58 சதவிகிதம்) சரிவடைந்து 38,164.61 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. என்டிபிசி, எல் அண்ட் டி, ஏசியன் பெய்ன்ட்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஆகிய பங்குகள் ஏற்றம் கண்டன. பிபிசிஎல் (BPCL), டாடா மோட்டர்ஸ், ஹெச்பிசிஎல் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன.
8 நாட்களுக்கு பின் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்
மும்பை: தொடர்ந்து 8 நாட்களாக உயர்வை சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.
பங்குச் சந்தைகளில் சரிவு
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 64.15 புள்ளிகள் (0.56 சதவிகிதம்) சரிவடைந்து 11,456.90 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மந்தமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாகக் குறையும் என ஃபிட்ச தர மதிப்பீடு நிறுவனம் கணித்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர் பங்குகளை விற்கத் தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.