தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

முதலீட்டாளர்களின் கனவை கலைத்த கரடி.. இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி! - இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை முதலீட்டாளர்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கவில்லை. மும்பை பங்குச் சந்தை 574.16 (0.99%) புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் ஆனது.

Sensex
Sensex

By

Published : Mar 21, 2022, 3:44 PM IST

மும்பை : மும்பை பங்குச் சந்தை 574.16 (0.99%) புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 174.20 (-1.01%) புள்ளிகளும் சரிந்து இன்று (மார்ச் 21) வர்த்தகம் ஆகின.

மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் ஃப்ரீடெயில் (FRETAIL), CIGNITI, பெட்ரோநெட் (PETRONET), தானி (DHANI) மற்றும் சன்டெக் (SUNTECK) உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் நஷ்டத்திலும், VALIANTORG, வோக்பார்மா (WOCKPHARMA), ஜூபில்பார்மா (JUBLPHARMA), எஸ்டிஎல்டெக் (STLTECH) மற்றும் NIITLTD உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் லாபகரமான வர்த்தகம் ஆகின.

அதிக லாபம் பெற்ற நிறுவனங்களாக KALPATPOWR, INFY, டாடா மோட்டார்ஸ் (TATAMOTORS), ஐடியா (IDEA) மற்றும் ரிலையன்ஸ் (RELIANCE) உள்ளிட்ட நிறுவன பங்குகள் காணப்பட்டன.

தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 174.20 புள்ளிகள் வரை சரிந்து 17, 112.85 என வர்த்தகம் ஆனது. பங்குகளை பொறுத்தமட்டில் HINDALCO, UPL, ONGC மற்றும் HDFCBANK உள்ளிட்ட பங்குகள் லாபகரமாகவும், பிரிட்டானியா (BRITANNIA), கிராஸிம் (GRASIM), டாடா கன்ஸ்யூம் (TATACONSUM), ஸ்ரீசெம் (SHREECEM) மற்றும் எஸ்பிஐ லைப் (SBILIFE) உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சியையும் கண்டன.

கடந்த வாரங்களில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் பங்குச் சந்தையின் போக்கை சற்று மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “இது நிதிநிலை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை”.. பட்டியலிட்ட டிடிவி தினகரன்!

ABOUT THE AUTHOR

...view details