இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று தொடக்கம் முதலே உயர்ந்து காணப்பட்டன. ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.யூ.எல்., டி.சி.எஸ். நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின. சன் ஃபார்மா, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஓ.என்.ஜி.சி., ஹீரோ மோட்டார்கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி. உள்ளிட்ட பங்குகளும் ஒரு சதவீதம்வரை உயர்ந்து காணப்பட்டன.
தொடரும் காளையின் ஆட்டம்! - சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்வு - சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்வு
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் உயர்வுடன் வர்த்தகம் ஆனது.
BSE
அந்த வகையில் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) சென்செக்ஸ் 291.62 புள்ளிகள் உயர்ந்து 38,506.09 ஆக காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தை (என்.எஸ்.இ.) நிஃப்டி 87.15 புள்ளிகள் உயர்ந்து 11,428.30 என வர்த்தகமானது.
இதையும் படிங்க:2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Last Updated : Oct 15, 2019, 9:17 PM IST