மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 92.90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. எனினும் பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக்கடன் பங்குகள் 56.95 புள்ளிகளும் பந்த்பேங்க் பங்குகள் 583.75 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.
ஐ.சி.ஐ.சி.ஐ. பொது காப்பீடு, எல்.டி., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச உயர்வைக் கண்டன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 43.25 புள்ளிகள் உயர்ந்து 11,471.55 என வர்த்தகம் ஆனது.