மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 452.73 (0.99 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 46,006.69 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 137.90 (1.03 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 13,466.30 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக எச்.சி.எல் நிறுவனப் பங்குகள் சுமார் 5 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா, இன்போசிஸ், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை, கோட்டாக் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, பஜாஜ் பைனாஸ், இண்டஸ்இன்ட் வங்கி ஆகியவை சரிவைக் கண்டன.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 முடக்கம் அமலுக்கு வருவதால் ஆசிய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. சாங்காய், சியோல், ஹாங்காங், டோக்கியோ பங்குசந்தைகள் இன்று வீழ்ச்சியை கண்டபோதும், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது வர்த்தகர்கள் இடையே நம்பிக்கையைத் தந்துள்ளது.
இதையும் படிங்க:ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை தனியாருக்கு விற்க தயாராகும் அரசு